இங்கிலாந்தில் வலது சாரி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதை கட்டுப்படுத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வெளிநாட்டு அகதிகளுக்கு எதிராக தீவிர வலதுசாரி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை ஒடுக்க முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் கடந்து வாரம் போராட்டம் நடத்தினர். இது பெரும் கலவரமாக உருவெடுத்துள்ளது. இந்த வன்முறையில் ஈடுபட்ட 400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்கொண்டு புதிய ஆர்ப்பாட்டங்களுக்கு வலதுசாரி அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் மீண்டும் கலவரம் ஏற்படுத்துவதை தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் குடியேற்றத்தை ஆதரிக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களுடைய வீடுகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.