இங்கிலாந்தில் ஆபத்தான கட்டிடத்தில் செயல்பட்ட 150 பள்ளிகள் மூடல்

September 2, 2023

இங்கிலாந்தில் மிகவும் ஆபத்தான கட்டிடங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த சுமார் 150 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் துவங்க உள்ளன. இந்நிலையில், பெரும்பாலான பள்ளிகள் முறையற்ற, மிகவும் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இதனால் எந்த நேரமும் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் சூழல் உள்ளது. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், இந்த கட்டிடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இவை தற்காலிகமாக […]

இங்கிலாந்தில் மிகவும் ஆபத்தான கட்டிடங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த சுமார் 150 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் துவங்க உள்ளன. இந்நிலையில், பெரும்பாலான பள்ளிகள் முறையற்ற, மிகவும் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இதனால் எந்த நேரமும் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் சூழல் உள்ளது. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், இந்த கட்டிடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதோடு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வேறு இடங்களில் பள்ளிகள் செயல்படும். அதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கீகன் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu