உக்ரைன் 6 ரஷ்ய விமானங்களை அழித்தது

April 6, 2024

ரஷ்யாவை சேர்ந்த ஆறு போர் விமானங்களை ட்ரோன்கள் கொண்டு தாக்கி அழித்ததாக உக்ரைன் கூறியுள்ளது. உக்ரைன் எல்லை மாகாணமான ரோஸ்தோவில் மோரோசோவ்ஸ்க்கு விமானதளம் அமைந்துள்ளது. இங்கு தான் ரஷ்ய விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் மீது ட்ரோன்கள் கொண்டு தாக்கப்பட்டது. அவை முற்றிலும் அழிந்தன. மேலும் எட்டு விமானங்கள் கணிசமான அளவில் சேதமடைந்துள்ளது. அதோடு இந்த தாக்குதலில் ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருப்பதற்கோ, காயமடைந்திருப்பதற்கோ […]

ரஷ்யாவை சேர்ந்த ஆறு போர் விமானங்களை ட்ரோன்கள் கொண்டு தாக்கி அழித்ததாக உக்ரைன் கூறியுள்ளது.

உக்ரைன் எல்லை மாகாணமான ரோஸ்தோவில் மோரோசோவ்ஸ்க்கு விமானதளம் அமைந்துள்ளது. இங்கு தான் ரஷ்ய விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் மீது ட்ரோன்கள் கொண்டு தாக்கப்பட்டது. அவை முற்றிலும் அழிந்தன. மேலும் எட்டு விமானங்கள் கணிசமான அளவில் சேதமடைந்துள்ளது. அதோடு இந்த தாக்குதலில் ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருப்பதற்கோ, காயமடைந்திருப்பதற்கோ வாய்ப்புள்ளது என்று கூறினர். இந்த விமான தளத்தில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக எஸ் யு 27 மற்றும் எஸ்யூ 34 ரக விமானங்களை ரஷ்யா நிறுத்தி வைத்திருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ரஷ்யா இதுவரை அறிக்கை எதுவும் அளிக்கவில்லை. என்றபோதிலும், ரோஸ்தோவில் மாகாணத்தை குறிவைத்து உக்ரைன் 40 ட்ரோன்களை ஏவியதை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu