உக்ரைனில் கிவ் மின் உற்பத்தி நிலையம் அழிப்பு

April 13, 2024

உக்ரைனில் உள்ள கிவ் நகரின் மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யா தாக்குதல் நடத்தி அழித்துள்ளது. உக்ரைனின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை கடந்த சில நாட்களாக ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பெரும் பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. கிவ், சைட்டோமிர் மற்றும் சேர்க்கசி ஆகிய முக்கிய பகுதிகளுக்கு ட்ரபிஸ்கா மின் உற்பத்தி நிலையம் மின்சாரம் வழங்கி வந்தது. […]

உக்ரைனில் உள்ள கிவ் நகரின் மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்யா தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

உக்ரைனின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை கடந்த சில நாட்களாக ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பெரும் பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. கிவ், சைட்டோமிர் மற்றும் சேர்க்கசி ஆகிய முக்கிய பகுதிகளுக்கு ட்ரபிஸ்கா மின் உற்பத்தி நிலையம் மின்சாரம் வழங்கி வந்தது. இந்நிலையில், இந்த நிலையத்தின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. டர்பைன்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் மின்மாற்றி ஆகியவற்றின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியதில் இந்த மின் நிலையம் முற்றிலுமாக தீப்பிடித்து எறிந்தது. முதல் ட்ரோன் தாக்குதல் நடந்த உடன் தொழிலாளர்கள் பதுங்கி தங்களை காத்துக் கொண்டனர். இந்த தாக்குதல் நடந்த பின் மீட்பு படையினர் அங்கு சென்று இடிபாடுகளை அகற்றினர். ட்ரபிஸ்கா ஆலை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு மின்சாரம் வழங்கி வந்தது. தற்போது மின் தேவை அங்கு குறைவாக இருப்பதால் மின் பற்றாக்குறை ஏற்படவில்லை. எனினும், கோடை காலத்தில் மின் தேவை அதிகரித்தால் மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் உருவாகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் பல்வேறு எரிசக்தி கட்டமைப்புகள் மீது கடும் தாக்குதல் நடைபெற்றது. இதனால் இந்த பகுதியில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரையின் தாக்குதல் நடத்தியதால் ரஷ்யா பதிலடி கொடுத்ததாக அதிபர் புதின் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu