உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக ருஸ்டெம் உமெரோவை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸிக்கு பதிலாக ருஸ்டெம் உமெரோவை நியமிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை இந்த வாரம் நாட பெறப்போவதாக கூறியுள்ளார். கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யாவுக்கு எதிரான போரில் முழுமையாக தன்னை அர்ப்பணித்தவர் ஒலெக்ஸி ரெஸ்னிகோ என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஒலெக்ஸி ரெஸ்னிகோபாதுகாப்பு மந்திரியாக உள்ளார். போரின் போது மேற்கத்திய ராணுவ உதவி பெற பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். தற்போது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒலெக்ஸி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. போர்க்களத்தில் ஊழல் முறைகேடுகளுக்கு இடமில்லை என அதிபர் ஜெலன்ஸ்கி முன்பு கூறியிருந்தார். இந்நிலையில் ஒலெக்ஸி நீக்கப்படும் முடிவு உக்ரின் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.