உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 39 பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் பல்வேறு இடங்களில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 39 பேர் பலியாகினர். 154 பேர் காயம் அடைந்துள்ளனர். உக்ரைனில் உள்ள ஐந்து முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை சரமாரியாக அடுக்குமாடி குடியிருப்புகள், பொது இடங்கள் என பல்வேறு கட்டிடங்கள் மீது செலுத்தியது. க்ரிவிரீ நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 10 பேர் பலியாகினர். 47 பேர் காயம் அடைந்தனர்.
தலைநகர் கீவில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஏழு பேர் பலியாகினர். மேலும் அந்நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஏழு சிறுவர்கள் உட்பட 16 பேர் காயமடைந்தனர். இந்த மருத்துவமனையின் வளாகத்தில் ரஷ்யாவின் கே ஹெச் 101 ரக ஏவுகணையின் சிதறல்கள் கண்டெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரஷ்யாவுக்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்தப்பட உள்ளது என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.