ரஷ்யாவிற்கு ஐ.நா. வில் இடம் எதற்கு - உக்ரைன் அதிபர்

September 19, 2023

ரஷ்யாவிற்கு ஐ.நா. கூட்டமைப்பில் இடம் எதற்கு என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி எழுப்பினார்.ரஷ்ய போர் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உலகத் தலைவர்களின் ஆதரவை நாடி வருகிறார். ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றனர். என்றபோதிலும், ரஷ்யாவுக்கு எதிராக உறுதியான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. அதோடு நேட்டோ படையில் உக்ரையினை சேர்ப்பதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்தும் மாநாட்டில் எந்த முடிவும் […]

ரஷ்யாவிற்கு ஐ.நா. கூட்டமைப்பில் இடம் எதற்கு என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி எழுப்பினார்.ரஷ்ய போர் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உலகத் தலைவர்களின் ஆதரவை நாடி வருகிறார். ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றனர். என்றபோதிலும், ரஷ்யாவுக்கு எதிராக உறுதியான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. அதோடு நேட்டோ படையில் உக்ரையினை சேர்ப்பதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்தும் மாநாட்டில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை ஐ.நா கண்டித்துள்ளது. எனினும், ரஷ்யா போரை நிறுத்தவில்லை.இந்த நிலையில், அமெரிக்காவில் ஐ.நாவின் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, எங்களுடைய செய்திகளை எங்களுடைய கூட்டாளிகள் கேட்பது மிகவும் அவசியமாகும். இன்னும் ஐநா சபையில் ரஷ்யா உறுப்பினராக இருப்பது பரிதாபத்திற்குரியது. ரஷ்ய பயங்கரவாதிகளுக்காக இங்கே இடம் இருக்கிறது. இந்த கேள்வி எனக்கானது அல்ல. இந்த அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமான கேள்வி என்றுதான் நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu