புதிய பட்ஜெட்டில், காப்பீட்டுத் துறைக்கான அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பு 74% லிருந்து 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது இந்த துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ULIP (Unit Linked Insurance Plan) திட்டங்களின் வருவாய்க்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ULIP பிரீமியத்திற்கான வரி சேமிப்பு வரம்பு ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ULIP திட்டங்களின் வருடாந்திர பிரீமியம் ரூ.2.5 லட்சத்தை மீறினால், அதன் வருவாயுக்கு 12.5% மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். இதற்கு முன், அதிகபட்சம் 30% வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புகளின் காரணமாக பங்குச் சந்தையில் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. அன்னிய முதலீட்டு வரம்பு 100% ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், முழு முதலீட்டும் இந்தியாவில் தான் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.