ஏமனில் படகு விபத்து - 38 பேர் பலி

June 11, 2024

ஏமனில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பலியாகியுள்ளனர். 100 பேர் மாயமாகியுள்ளனர். ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றுக் கொண்டு ஏமன் நாட்டின் கடல் அருகே படகு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கடல் சீற்றத்தால் அது தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் உயிரிழந்தனர். 100 பேர் கடலில் தொலைந்துள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஏமனின் கிழக்கில் உள்ள ஷாபா பகுதி கடற்கரையை நோக்கி இந்த படகு வந்த போது விபத்துக்குள்ளானது. […]

ஏமனில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பலியாகியுள்ளனர். 100 பேர் மாயமாகியுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றுக் கொண்டு ஏமன் நாட்டின் கடல் அருகே படகு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கடல் சீற்றத்தால் அது தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் உயிரிழந்தனர். 100 பேர் கடலில் தொலைந்துள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஏமனின் கிழக்கில் உள்ள ஷாபா பகுதி கடற்கரையை நோக்கி இந்த படகு வந்த போது விபத்துக்குள்ளானது. இங்குள்ள உள்ளூர் மீனவர்கள் விரைந்து சென்று தத்தளித்த 78 அகதிகளை மீட்டனர். சமீப காலமாக கடலில் அகதிகள் சொல்லும் படகு மூழ்கி விபத்துக்குள்ளாவது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐநாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஐநாவின் அறிக்கைப்படி கடந்த ஓராண்டில் மட்டும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு 97,000 அகதிகள் வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu