ஆப்பிரிக்க நாடு ஜிபூட்டியின் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்தானதில் 38 அகதிகள் பலியாகினர்.
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடு ஜிபூட்டி. இதன் கடலருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் பலியாகினர் என்று ஐநா அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வேலை வாய்ப்பு தேடி வளைகுடா நாடுகளுக்கு அகதிகள் ஏமனை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த படகு விபத்துக்குள்ளானது. இதில் கடலில் மூழ்கி 38 பேர் பலியாகினர். அந்த பகுதியிலிருந்து 22 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் ஆறு அகதிகள் மாயமாகியுள்ளனர் அவர்களை மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.