உலக சுற்றுலா தினமான இன்று, செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக முக்கியமான ஒரு நிகழ்வு நடைபெற்று வருகிறது. யுனெஸ்கோ தேர்வுக் குழுவின் பிரதிநிதி வாஜாங் லீ தலைமையிலான குழுவினர் இன்று செஞ்சிக் கோட்டையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களை செஞ்சி எம்எல்ஏ அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வரவேற்றனர்.
இந்த ஆய்வுக்குப் பின்னர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ராஜா தேசிங்கு வம்சாவளியினருடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பின், யுனெஸ்கோ குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் ஆய்வின் முடிவுகள் குறித்து விளக்கமளிப்பார்கள். இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், செஞ்சிக் கோட்டை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.