லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யூனிலீவர் நிறுவனம், உணவு, உடல் பராமரிப்பு சார்ந்த பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்த நிறுவனம், ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த பிரிவில் பணியாற்றி வரும் 75000 பேர் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
யூனிலீவர் நிறுவனத்தின் மேக்னம் மற்றும் மென் அண்ட் ஜெர்ரி ஆகிய ஐஸ்கிரீம் பிராண்டுகள் பிரபலமானவை. தற்போது இந்த இரு நிறுவனங்களையும் தனித் தனி நிறுவனங்களாக மேம்படுத்தும் திட்டத்தில் யூனிலீவர் நிறுவனம் பணியாற்ற உள்ளது. அத்துடன், செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக ஐஸ்கிரீம் வர்த்தகத்திலிருந்து வெளியேறுகிறது. இதன் மூலம், யூனிலீவர் நிறுவனத்தின் நிலையான வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக நிறுவனத்தின் தலைவர் இயான் மேகன்ஸ் தெரிவித்துள்ளார்.