மத்திய ரிசர்வ் வங்கி, வரி செலுத்துவதற்கான யுபிஐ பரிவர்த்தனைக்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச தொகையை 1 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது. இது, அதிக வரி செலுத்துபவர்களுக்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி கொள்கை குழு சந்திப்புக்குப் பிறகு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தி வரி செலுத்துவதற்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அத்தகைய கட்டணங்கள் கிடையாது. அந்த வகையில், இந்த நடவடிக்கை பல்வேறு துறைகளில் யுபிஐ பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் தற்போதைய முயற்சிகளுடன் இணைந்ததாகும்.