இந்தியாவில், யுபிஐ பரிவர்த்தனைகள் வருடாந்திர அடிப்படையில் 57% வளர்ச்சியடைந்துள்ளது. நடப்பு ஜூலை மாதத்தில், யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு 6.28 பில்லியனை எட்டி உள்ளது. இந்திய சந்தையை பொறுத்தவரை, போன் பே மற்றும் கூகுள் பே ஆகியவை ஆதிக்கம் செலுத்தி, மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் 80% பங்களிப்பைப் பெற்றுள்ளன. இதில் போன் பே 47% பங்கையும், கூகுள் பே 33% பங்கையும் பெற்றுள்ளன. பேடிஎம், அமேசான் பே, வாட்ஸ் அப் பே போன்ற மற்ற நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவிலான பங்களிப்பை பெற்றுள்ளன.