உக்ரைனுக்கு 250 மில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்கா ராணுவ உதவி

August 30, 2023

உக்ரைனுக்கு 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ தொகுப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் ஏவுகணைகள் கொண்டு தாக்கி அழித்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா உதவியுடன் ரஷ்யாவை எதிர்த்து வருகிறது உக்ரைன். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ விமானங்கள், ஏவுகணைகள் வழங்கி உதவி செய்கின்றனர். அமெரிக்கா பல மில்லியன் டாலர்களை இராணுவ உதவியாக வழங்கி வந்துள்ளது. இந்நிலையில், சுரங்கங்கள் […]

உக்ரைனுக்கு 250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ தொகுப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் ஏவுகணைகள் கொண்டு தாக்கி அழித்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா உதவியுடன் ரஷ்யாவை எதிர்த்து வருகிறது உக்ரைன். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ விமானங்கள், ஏவுகணைகள் வழங்கி உதவி செய்கின்றனர். அமெரிக்கா பல மில்லியன் டாலர்களை இராணுவ உதவியாக வழங்கி வந்துள்ளது.

இந்நிலையில், சுரங்கங்கள் மற்றும் பிற தடைகளை அகற்றக்கூடிய உபகரணங்களை கொண்ட ராணுவ உதவியை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மதிப்பு 250 மில்லியன் டாலர்கள் ஆகும். வான் பாதுகாப்பு, ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள், கவச எதிர்ப்பு ஏவுகணைகள், ஆயுத வெடி மருந்துகள் போன்றவை இந்த ஆயுத தொகுப்பில் உள்ளன. இவற்றைக் கொண்டு உக்ரைன் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிடலாம் என்று பென்டகன் அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu