உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி அளிக்க உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி மற்றும் நிதி உதவி வழங்கி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வந்த போதிலும் பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படவில்லை. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது. இந்த தொகுப்பில் ஏவுகணைகள், ராணுவ தாங்கிகள், அதிநவீன ஆயுதங்கள் போன்றவை இருக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா 50.6 பில்லியன் டாலர் வரை உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.