அமெரிக்காவின் ராணுவ விமானம் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா புறப்பட்டது. விமானம் எப்போது புறப்பட்டது மற்றும் எப்போது இந்தியா செல்லும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், சி-17 ராணுவ விமானம் சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றது என்று தெரிவித்தார். அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து, "அமெரிக்கா குடியேற்ற சட்டங்களையும் எல்லை பாதுகாப்பையும் கடுமையாக்கியுள்ளது" என மட்டும் கூறினார். டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து […]

அமெரிக்காவின் ராணுவ விமானம் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா புறப்பட்டது.

விமானம் எப்போது புறப்பட்டது மற்றும் எப்போது இந்தியா செல்லும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், சி-17 ராணுவ விமானம் சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றது என்று தெரிவித்தார். அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து, "அமெரிக்கா குடியேற்ற சட்டங்களையும் எல்லை பாதுகாப்பையும் கடுமையாக்கியுள்ளது" என மட்டும் கூறினார்.

டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் 205 இந்தியர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து ஆவணங்களும் சரிபார்த்த பிறகு, அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu