செங்கடலில் 28 ஹவுதி டிரோன்களை வீழ்த்தியது அமெரிக்க கூட்டுப்படை

March 11, 2024

செங்கடல் பகுதியில் ஹவுதி அமைப்பின் 28 டிரோன்களை அமெரிக்க கூட்டு படை சுட்டு வீழ்த்தியது. செங்கடல் பகுதியில் ப்ரொபைல் ஃபார்ச்சூன் எனும் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது அதனை ஹவுதி அமைப்பினர் ட்ரோன்கள் மூலம் தாக்க முயன்றனர். அப்போது 28 டிரோன்களை அமெரிக்க கூட்டு படை சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது அமெரிக்க கூட்டு படையின் கப்பல்களுக்கோ அல்லது வணிக கப்பல்களுக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஹவுதிகளின் தாக்குதல் காரணமாக […]

செங்கடல் பகுதியில் ஹவுதி அமைப்பின் 28 டிரோன்களை அமெரிக்க கூட்டு படை சுட்டு வீழ்த்தியது.

செங்கடல் பகுதியில் ப்ரொபைல் ஃபார்ச்சூன் எனும் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது அதனை ஹவுதி அமைப்பினர் ட்ரோன்கள் மூலம் தாக்க முயன்றனர். அப்போது 28 டிரோன்களை அமெரிக்க கூட்டு படை சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது அமெரிக்க கூட்டு படையின் கப்பல்களுக்கோ அல்லது வணிக கப்பல்களுக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஹவுதிகளின் தாக்குதல் காரணமாக செங்கடல் பகுதியை தவிர்த்து பெரும்பாலான வணிக கப்பல்கள் தென் ஆப்பிரிக்கா வழியாக சுற்றி செல்கின்றன. தற்போது அமெரிக்க மற்றும் இங்கிலாந்து கூட்டு படையினர் ஹவுதிகள் இயங்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், ஈரானின் உதவியுடன் செங்கடல் பகுதி வழியாக வரும் கப்பல்களை தொடர்ந்து ஹவுதி அமைப்பினர் தாக்கி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu