கெஜ்ரிவால் வழக்கில் வெளிப்படையான விசாரணை வேண்டும் - அமெரிக்கா

March 27, 2024

கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21 ஆம் தேதி கைது செய்தனர். இதனை தொடர்ந்து மறுநாள் அவரை டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கெஜ்ரிவாலை ஆறு நாட்கள் அமலாக்கத்துறை […]

கெஜ்ரிவால் வழக்கில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லி மதுபான பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21 ஆம் தேதி கைது செய்தனர். இதனை தொடர்ந்து மறுநாள் அவரை டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கெஜ்ரிவாலை ஆறு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் கெஜ்ரிவால் கைது விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான கேள்விக்கு அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் பதிலளிக்கையில், கெஜ்ரிவால் கைது நடவடிக்கைகளை அமெரிக்க அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது, இந்த வழக்கில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும், சிறையில் உள்ள டெல்லி முதல்வருக்கு சரியான நேரத்தில் சட்ட உதவி கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார், முன்னதாக, கெஜ்ரிவால் கைது விவகாரம் குறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து கூறியிருந்தது. இந்த வழக்கில் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கோட்பாடுகள் பின்பற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தது ஜெர்மனி அரசு.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu