ஈரான் மீது பொருளாதார தடை - அமெரிக்கா

April 17, 2024

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தடை விதிக்க கூடும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறியுள்ளார். சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் கடந்த சனி அன்று இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்கியது. இவற்றை அமெரிக்க உதவியுடன் இஸ்ரேல் முறியடித்தது. இந்த சம்பவம் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரானை எந்த நேரத்திலும் இஸ்ரேல் தாக்குவதற்கான […]

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தடை விதிக்க கூடும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் கூறியுள்ளார்.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் கடந்த சனி அன்று இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்கியது. இவற்றை அமெரிக்க உதவியுடன் இஸ்ரேல் முறியடித்தது. இந்த சம்பவம் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரானை எந்த நேரத்திலும் இஸ்ரேல் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஈரான் தாக்குதலுக்கு ஜி7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஜி 7 உறுப்பு நாடுகளுடன் அமெரிக்க அதிபர் பிடென் விரிவான ஆலோசனையை நடத்தியுள்ளார். அதன்படி வருகிற நாட்களில் ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்பட உள்ளது. அதோடு ஈரானின் ஏவுகணை திட்டங்கள், இஸ்லாமிய புரட்சி காவல் படை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு ஆதரவு தரும் அமைப்புகளுக்கும் எதிராக தடைகள் விதிக்கப்பட உள்ளது. அதேபோல் நட்பு நாடுகளும் தடை விதிக்க கூடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu