ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டு பகுதியில் அமெரிக்கா நான்காவது சுற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பகுதியில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு படை கூறியுள்ளதாவது, ஏமனில் ஹவுதி நிலைகள் மீது கடந்த புதன் அன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. செங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் வீசி இந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலைகள் சர்வதேச சரக்கு கப்பல்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை எனவே இதனை குறி வைத்து 14 ஏவுகணைகள் வீசப்பட்டன இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
காசாவில் நடைபெறும் போரில் ஹமாசுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். அதனாலேயே செங்கடல் பகுதியில் உள்ள சரக்கு கப்பல்களை குறி வைத்துள்ளனர். இதனை அடுத்து அமெரிக்காவிற்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவிற்காக பிரிட்டனும் தாக்குதலில் இறங்கியுள்ளது. அவர்களை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதோடு அவர்களுக்கு கிடைக்கும் சர்வதேச நிதியை முடக்கியுள்ளது. இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சி படையினரின் நிலைகள் மீது அமெரிக்கா தற்போது நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது.