அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA), சனிக்கிழமை நடைபெற்ற நாசா விண்வெளி பயணத்தின் போது ஏற்பட்ட கோளாறை கருத்தில் கொண்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் பயன்பாட்டை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை, பால்கன் 9 ராக்கெட்டின் 2 வது பாகம், "டி ஆர்பிட் பர்ன்" எனப்படும் முக்கிய செயல்முறையை முறையாக செய்யத் தவறியதால், பசிபிக் கடலில் உள்ள பாதுகாப்பு மண்டலத்திற்கு வெளியே தரை இறங்கியது. இதே போன்ற கோளாறுகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும் ஏற்பட்டன. இதனால், 3 மாதங்களில் பால்கன் 9 ராக்கெட்டின் 3 வது தடைவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் FAA இடையே உரிமங்கள் மற்றும் அபராதங்கள் தொடர்பாக சச்சரவுகள் நிலவி வரும் சூழலில், தற்போதைய ராக்கெட் கோளாறு அதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. FAA மேற்பார்வையுடன் கோளாறு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதற்கான தீர்வு எட்டப்பட்டவுடன் மீண்டும் விண்வெளி பயணங்களை தொடங்க ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது.