சீனாவின் எதிர்ப்புக்கு மத்தியில், அமெரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட 5 நாடுகள் ராணுவ ஒத்திகை

August 31, 2023

கிழக்கு ஜாவாவில் உள்ள பலூரான் பகுதியில், அமெரிக்கா, இந்தோனேஷியா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டு ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. வருடாந்திர அடிப்படையில் இந்த ஒத்திகை நடைபெற்று வருகிறது. சீனாவின் வலுவான எதிர்ப்புக்கு மத்தியில், இந்த ஆண்டுக்கான ஒத்திகை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா இடையே கூட்டு ராணுவ ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல், இந்த கூட்டணியில், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் […]

கிழக்கு ஜாவாவில் உள்ள பலூரான் பகுதியில், அமெரிக்கா, இந்தோனேஷியா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டு ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. வருடாந்திர அடிப்படையில் இந்த ஒத்திகை நடைபெற்று வருகிறது. சீனாவின் வலுவான எதிர்ப்புக்கு மத்தியில், இந்த ஆண்டுக்கான ஒத்திகை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா இடையே கூட்டு ராணுவ ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல், இந்த கூட்டணியில், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. தொடர்ந்து, இந்த ஆண்டு, பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு நாட்டு வீரர்கள் ஒத்தகையில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கிட்டதட்ட 5000 ராணுவ வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட உள்ளனர். சூப்பர் கருடா ஷீல்ட் என இந்த ஒத்திக்கைக்கு பெயரிடப்பட்டுள்ளது. கிழக்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் விதமாக இந்த ஒத்திகை கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu