அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகள் இணைந்து, ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இரு நாடுகளும் தங்களை எதிரிகளாக பாவித்துக்கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், நேற்று காலை, ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் நவீன ஆயுதங்களுடன் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி கடற்கரை தாக்குதலை எதிர்கொள்ளும் நோக்கில் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ராணுவத்தினருடன் சேர்த்து கிட்டத்தட்ட 23 டன் போர் வாகனங்கள் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த ராணுவ ஒத்திகை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இரு நாடுகளின் ராணுவ பலத்தை இந்த ஒத்திகை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது என்று கூறப்படுகிறது. அதே வேளையில், வடகொரியா, எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.