அமெரிக்கா நடத்திய இரு தாக்குதல்களில் சிரியாவில் உள்ள மத பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் அல்-காய்தாவுடன் தொடர்புடைய 37 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை, வடமேற்கு சிரியாவில் "ஹுராஸ் அல்-தீன்" குழுவின் மூத்த உறுப்பினர் உள்பட 9 பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய சிரியாவில், ஐ.எஸ். பயிற்சி முகாமில் 16-ஆம் தேதி வரை பல்வேறு வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் 28 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் திறனை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2014-ஆம் ஆண்டு இராக் மற்றும் சிரியாவில் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றிய ஐ.எஸ். அமைப்பின் வளர்ச்சியை தடுக்க, அமெரிக்க படையின் 900 வீரர்கள் அங்கு முகாமிட்டு உள்ளனர். மேலும் குா்திஷ் படைப் பிரிவுகளுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.