அமெரிக்காவின் பண இருப்பு குறைவு - நிதி நெருக்கடி குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை

May 3, 2023

அமெரிக்கா அசாதாரண நிதி நெருக்கடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்நாட்டின் கருவூல செயலாளர் ஜேனட் ஏலன், அமெரிக்காவில், ரொக்கப் பண இருப்பு ஜூன் 1 ம் தேதியுடன் நிறைவடையும் என கூறியுள்ளார். மேலும், உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பெயரில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் சந்திப்பு நடைபெற இருக்கிறது. அமெரிக்காவின் நிதி நிலைமை சரிவடைவது உலகப் பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க அரசியலிலும் இது […]

அமெரிக்கா அசாதாரண நிதி நெருக்கடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்நாட்டின் கருவூல செயலாளர் ஜேனட் ஏலன், அமெரிக்காவில், ரொக்கப் பண இருப்பு ஜூன் 1 ம் தேதியுடன் நிறைவடையும் என கூறியுள்ளார். மேலும், உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பெயரில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

அமெரிக்காவின் நிதி நிலைமை சரிவடைவது உலகப் பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க அரசியலிலும் இது முக்கிய பங்கு வகிக்கும். எனவே, நிதி நெருக்கடி குறித்து துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஜோ பைடன், ஜனநாயக கட்சி தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ், செனேட் பெரும்பான்மை தலைவர் சுக் ஷுமர், குடியரசு கட்சி தலைவர் மிச் மெக்கானல் ஆகியோரை மே 9ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu