சொந்த ஊரில் தோல்வி அடைந்த நிக்கி ஹாலி

February 26, 2024

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் விறுவிறுப்பாகி உள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப் படுபவருக்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு மாகாணங்களிலும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். அதே சமயத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில், மேலும் ஒரு பின்னடைவாக, தனது சொந்த ஊரிலேயே நிக்கி ஹாலே தோல்வி அடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. குடியரசு கட்சியை சேர்ந்த நிக்கி […]

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் விறுவிறுப்பாகி உள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப் படுபவருக்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு மாகாணங்களிலும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். அதே சமயத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். அந்த வகையில், மேலும் ஒரு பின்னடைவாக, தனது சொந்த ஊரிலேயே நிக்கி ஹாலே தோல்வி அடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

குடியரசு கட்சியை சேர்ந்த நிக்கி ஹாலே, தெற்கு கரோலினா பகுதியில், கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு ஆளுநராக பதவி வகித்தார். இந்த நிலையில், தெற்கு கரோலினா பகுதியில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப், நிக்கி ஹாலியை விட 20% கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளார். தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தாலும், போட்டியில் நீடிப்பேன் என நிக்கி ஹாலே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu