ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை தொடங்கிய அமெரிக்கா

January 12, 2024

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது. உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இராணுவ உதவிகளை வழங்கி வந்ததால், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா நிறுத்தியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் எண்ணெய் இறக்குமதியை தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் எரிசக்தி துறை வெளியிட்ட அண்மை அறிக்கையில், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் 36800 பேரல் மற்றும் நவம்பரில் 9900 பேரல் எண்ணெய் […]

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது. உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இராணுவ உதவிகளை வழங்கி வந்ததால், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா நிறுத்தியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் எண்ணெய் இறக்குமதியை தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் எரிசக்தி துறை வெளியிட்ட அண்மை அறிக்கையில், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் 36800 பேரல் மற்றும் நவம்பரில் 9900 பேரல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு முறையே 2.7 மில்லியன் மற்றும் 749500 டாலர்கள் ஆகும். இந்த எண்ணெய் இறக்குமதி முறையான அனுமதி உடன் நிகழ்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு பேரல் எண்ணெய் 74 மற்றும் 76 டாலர்களுக்கு, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் முறையே வாங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu