போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் சம்மதம் - பிளிங்கன்

August 20, 2024

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போர் ஆரம்பித்ததில் இருந்து தற்போது ஒன்பதாவது முறையாக அவர் இங்கு வந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தற்போது முன்மொழியப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் இனி ஹமாஸிடம் தான் முடிவு உள்ளது என்ற தெரிவித்துள்ளார். இந்தப் போர் […]

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். போர் ஆரம்பித்ததில் இருந்து தற்போது ஒன்பதாவது முறையாக அவர் இங்கு வந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தற்போது முன்மொழியப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் இனி ஹமாஸிடம் தான் முடிவு உள்ளது என்ற தெரிவித்துள்ளார்.

இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து எந்த தகவலும் எங்களுக்கு தெரியாது என்று ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பதாக மத்தியஸ்தர்களிடம் ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுடைய ஆதிக்கம் இல்லாத புதிய அமைப்பை உருவாக்கினால் நாங்கள் உடன்படுவோம். எங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் எதுவும் தேவையில்லை என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்க பிளிங்கன் எகிப்து மற்றும் கத்தாருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu