அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த துயர சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.