அருணாச்சலை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு

June 22, 2023

அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு செய்துள்ளது. மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு செய்துள்ளது. இந்திய - சீன எல்லையில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியை மாற்ற சீனா, ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை இந்தத் தீர்மானம் கண்டிக்கிறது. இந்த […]

அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு செய்துள்ளது.

மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை பரிசீலிக்க அமெரிக்க செனட் குழு முடிவு செய்துள்ளது. இந்திய - சீன எல்லையில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியை மாற்ற சீனா, ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை இந்தத் தீர்மானம் கண்டிக்கிறது.

இந்த தீர்மானம், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜெஃப் மெர்க்லி மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பில் ஹகெர்டி ஆகியோரால் இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்கும் இந்தத் தீர்மானம், அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியக் குடியரசின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu