அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போர் பயிற்சி

January 18, 2024

அமெரிக்கா ஜப்பான் மற்றும் தென் கொரியா மீண்டும் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா ஏவுகணை மற்றும் எறிகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக தென்கொரியாவும் ஆயுத சோதனைகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இணைந்து மூன்று நாட்களுக்கு ராணுவ கூட்டு பயிற்சி நடத்தியுள்ளது. இதுகுறித்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் கூறுகையில், தங்கள் நாட்டையும் தென்கொரியாகவும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் இனிமேல் தொடரப்படாது […]

அமெரிக்கா ஜப்பான் மற்றும் தென் கொரியா மீண்டும் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரியா ஏவுகணை மற்றும் எறிகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக தென்கொரியாவும் ஆயுத சோதனைகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இணைந்து மூன்று நாட்களுக்கு ராணுவ கூட்டு பயிற்சி நடத்தியுள்ளது.

இதுகுறித்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் கூறுகையில், தங்கள் நாட்டையும் தென்கொரியாகவும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் இனிமேல் தொடரப்படாது என்று கூறினார். ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் அரசியல் சாசனத்தின் சட்ட பிரிவை நீக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அதோடு தென்கொரியாவுடன் நல்லுறவை பேண செயல்பட்டு வந்த அரசு துறைகளையும் அவர் கலைத்துள்ளார். இந்த அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் வடகொரியாவையும், தென்கொரியாவையும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu