அமெரிக்கா துருக்கி நாடுகள் மாபெரும் ராணுவ ஒத்திகை

August 28, 2023

கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக, மிகப்பெரிய ராணுவ ஒத்திகையை அமெரிக்கா மற்றும் துருக்கி நாடுகள் தொடங்கியுள்ளன. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் துருக்கி இடையிலான உறவு மிகவும் வலுவடைகிறது. இதற்கு மத்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்டோகன் அடுத்த மாதம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜி 20 மாநாட்டை ஒட்டி இது நடைபெறலாம் என கருதப்படுகிறது. கடந்த மாதம், நேட்டோ கூட்டமைப்பில் ஸ்வீடன் நாடு இணைவதற்கு துருக்கி […]

கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக, மிகப்பெரிய ராணுவ ஒத்திகையை அமெரிக்கா மற்றும் துருக்கி நாடுகள் தொடங்கியுள்ளன. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் துருக்கி இடையிலான உறவு மிகவும் வலுவடைகிறது. இதற்கு மத்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்டோகன் அடுத்த மாதம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜி 20 மாநாட்டை ஒட்டி இது நடைபெறலாம் என கருதப்படுகிறது.

கடந்த மாதம், நேட்டோ கூட்டமைப்பில் ஸ்வீடன் நாடு இணைவதற்கு துருக்கி ஒப்புதல் அளித்தது. நெடு நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த துருக்கி, தன் நிலைப்பாட்டில் இருந்து மாறியது, அமெரிக்காவுடனான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக கருதப்படுகிறது. மேலும், அமெரிக்காவிடமிருந்து எஃப் 16 போர் விமானங்களை துருக்கி வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம், துருக்கியின் முக்கிய துறைமுகப் பகுதியில், அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல் வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து, இரு நாடுகளின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் இணைந்து ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்த மிகப்பெரிய ஒத்திகை மூலம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வளர்ச்சி அடையும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu