3 கட்ட போர் நிறுத்த திட்டம் - ஐ நாவில் அமெரிக்கா சமர்ப்பிப்பு

June 5, 2024

காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான மூன்று காட்ட ஒப்பந்த திட்டத்திற்கு ஐநா ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஐநாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கூறியதாவது, காசா போரை நிறுத்துவதற்கு மூன்று கட்ட போர் நிறுத்த ஒப்பந்த வரைவு திட்டத்தை ஜோ பிடென் முன்வைத்துள்ளார். அந்த திட்டத்தின் நகல்கள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த 14 உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்கு ஏராளமான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக மேற்கு ஆசிய […]

காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான மூன்று காட்ட ஒப்பந்த திட்டத்திற்கு ஐநா ஆதரவு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஐநாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கூறியதாவது, காசா போரை நிறுத்துவதற்கு மூன்று கட்ட போர் நிறுத்த ஒப்பந்த வரைவு திட்டத்தை ஜோ பிடென் முன்வைத்துள்ளார். அந்த திட்டத்தின் நகல்கள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த 14 உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்கு ஏராளமான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக மேற்கு ஆசிய பிராந்திய நாடுகள் அவற்றை வரவேற்றுள்ளன. எனவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிபந்தனைகள் இல்லாமல் முழு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்தை கடந்த வெள்ளி அன்று ஜோ பிடென் வெளியிட்டார். அந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 6 வாரங்களுக்கு முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும். நெருக்கமாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படையினர் வெளியேறுவார்கள். கணிசமான பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள். அவர்களுக்கு பதிலாக இஸ்ரேலில் உள்ள சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அமெரிக்கா பிணை கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் காசாவுக்கு நிவாரண உதவிகள் அதிகரிக்கப்படும். காசாவுக்குள் தினமும் 600 நிவாரண வாகனங்கள் அனுமதிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu