சென்னை நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

September 25, 2023

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் 25 வழித்தடங்களில் 50 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. அதன் பின் சென்னை - மைசூர் இடையே தொடங்கப்பட்டது. இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வலுத்ததை தொடர்ந்து நெல்லை - சென்னை இடையே ரயிலை இயக்க ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது.இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் […]

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் 25 வழித்தடங்களில் 50 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. அதன் பின் சென்னை - மைசூர் இடையே தொடங்கப்பட்டது. இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வலுத்ததை தொடர்ந்து நெல்லை - சென்னை இடையே ரயிலை இயக்க ரயில்வே துறை அனுமதி அளித்துள்ளது.இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி இதனை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மேலும் இந்த ரயிலுடன் விஜயவாடா- சென்னை சென்ட்ரல், காசர்கோடு - திருவனந்தபுரம் ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu