சென்னை எழும்பூர்-நெல்லை இடையில் வந்தே பாரத் ரயில்

August 29, 2023

சென்னை எழும்பூர்-நெல்லை இடையே மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் மற்றும் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல்-கோவை இடையே இரண்டு பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவதாக சென்னை எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியிடாத நிலையிலும் இதற்கான பணிகள் ரயில் நிலையங்களில் நடந்து வருகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் […]

சென்னை எழும்பூர்-நெல்லை இடையே மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் மற்றும் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல்-கோவை இடையே இரண்டு பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவதாக சென்னை எழும்பூர்-நெல்லை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியிடாத நிலையிலும் இதற்கான பணிகள் ரயில் நிலையங்களில் நடந்து வருகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

அம்ரீத் பாரத் என்ற திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.இதன் படி தற்போது சென்னை எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் 3 வது ரயிலை நிறுத்தி வைப்பதற்கு என்று தனியாக நெல்லையில் பிட்லைன் ஒன்று தேவைப்படுகிறது. இதற்காக நெல்லை ரயில் நிலையத்தில் பிட்லைன் அமைப்பதற்காக தெற்கு ரயில்வே நிறுவனம் பணியை தொடர்ந்துள்ளது. இந்த பணிகள் முடிந்த பின் எழும்பூர் - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu