கடன் பத்திர வெளியீட்டின் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி திரட்ட வேதாந்தா திட்டம்

June 20, 2024

வேதாந்தா குழுமம் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 6.5% அளவுக்கு வேதாந்தா பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின. மும்பை பங்குச் சந்தையில் வேதாந்தாவின் ஒரு பங்கு மதிப்பு 477.9 ரூபாய் அளவில் இருந்தது. மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம், 1000 கோடி நிதி திரட்டுவதற்கு வேதாந்தா குழுமத்தின் நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற நிர்வாக […]

வேதாந்தா குழுமம் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 6.5% அளவுக்கு வேதாந்தா பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின. மும்பை பங்குச் சந்தையில் வேதாந்தாவின் ஒரு பங்கு மதிப்பு 477.9 ரூபாய் அளவில் இருந்தது.

மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம், 1000 கோடி நிதி திரட்டுவதற்கு வேதாந்தா குழுமத்தின் நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற நிர்வாக குழு உறுப்பினர் சந்திப்பின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு லட்ச ரூபாய் பேஸ் வேல்யூ கொண்ட ஒரு லட்சம் கடன் பத்திரங்களை வெளியிட்டு ஆயிரம் கோடி நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, வேதாந்தா குழுமத்தின் நிகர கடன் மதிப்பு 25% உயர்ந்து 56338 கோடியாக உள்ளது. எனவே, இந்த நிதி திரட்டல் நடவடிக்கை நிறுவனத்தின் கடன் சுமையை பெருமளவு குறைக்க உதவும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu