தமிழகத்தில் காவலர்களுக்கு வாகன சேவையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆண் காவலர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்சர் வாகனங்களும், பெண் காவலர்களுக்கு டிவிஎஸ் ஜூபிடர் வாகனங்களும் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி 85 இருசக்கர வாகனங்களின் செயல்பாட்டை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடியை சேர்த்து தொடங்கி வைத்துள்ளார்.இதற்கு ரூபாய் 74.08 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.