வெனிசுலா தேர்தல் - எட்முண்டோவுக்கு அமெரிக்கா ஆதரவு

August 3, 2024

வெனிசுலா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் எட்முண்டோ கான்சாலஸ் வெற்றி அடைந்ததாக அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த வாரம் வெனிசுலாவின் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மடுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவருக்கு 51% வாக்குகள் கிடைத்தது. எதிர்க்கட்சி வேட்பாளர் எட்முண்டோவுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சுமார் 70% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மடுரோவை விட எட்முண்டோ அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் […]

வெனிசுலா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் எட்முண்டோ கான்சாலஸ் வெற்றி அடைந்ததாக அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த வாரம் வெனிசுலாவின் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மடுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவருக்கு 51% வாக்குகள் கிடைத்தது. எதிர்க்கட்சி வேட்பாளர் எட்முண்டோவுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சுமார் 70% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் மடுரோவை விட எட்முண்டோ அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் மடுரோவுக்கு 51% வாக்குகள் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மிகப்பெரிய முறைகேடு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்நிலையில், இந்த தேர்தலில் எட்முண்டோ கான்சலஸ் வெற்றியடைந்ததாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu