துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பல்வேறு விழாக்களில் பங்கேற்க சென்னை வர உள்ளார்.
நாளை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், சென்னை அருகிலுள்ள சில விழாக்களில் பங்கேற்க வருகிறார். அவர், முட்டுக்காடு மற்றும் மாமல்லபுரத்தில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொள்ளவுள்ளார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி, நாளை விமான நிலையம், ராஜ் பவன் மற்றும் விவிஐபி பயண பாதைகள் சிவப்பு மண்டலமாக காவல்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளன.