நியூயார்க்கில் நடைபெற்ற வட்டமேசை கூட்டத்தில் 15 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பிரதமர் மோடியுடன் உரையாடினர். என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, AMD தலைமை நிர்வாக அதிகாரி லிசா சு, IBM தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
ஜென்சன் ஹுவாங், "இது இந்தியாவின் தருணம்" என்று வலியுறுத்தி, மோடியின் தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறையை, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பாராட்டினார். இந்தியா தொழில்நுட்ப துறையில் பெரும் திறனை கொண்டுள்ளதை அவர் குறிப்பிட்டு, இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பை மேற்கொள்ளும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அதே சமயத்தில், உலகின் முன்னணி பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு தொடர்பாக இந்தியா உறுதியுடன் இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.