குடியேறுவதற்கு அதிக செலவில்லாத நாடுகள் பட்டியல் வெளியீடு - ஆசிய நாடுகள் முன்னிலை

July 9, 2024

வெளிநாட்டினர் குடியேறுவதற்கு அதிக செலவில்லாத நாடுகள் எவை என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆசிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. பொதுமக்களின் வாழ்க்கைத் தரம், வாழ்வாதாரம், பொருளாதாரச் சூழல் போன்ற பல காரணிகளை ஆய்வு செய்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில், குடியேறுவதற்கு செலவு குறைந்த நாடாக வியட்நாம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக வியட்நாம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வியட்நாமை தொடர்ந்து, கொலம்பியா, இந்தோனேசியா, பணாமா, பிலிப்பைன்ஸ், இந்தியா, மெக்சிகோ, தாய்லாந்து, பிரேசில், […]

வெளிநாட்டினர் குடியேறுவதற்கு அதிக செலவில்லாத நாடுகள் எவை என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆசிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. பொதுமக்களின் வாழ்க்கைத் தரம், வாழ்வாதாரம், பொருளாதாரச் சூழல் போன்ற பல காரணிகளை ஆய்வு செய்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலக அளவில், குடியேறுவதற்கு செலவு குறைந்த நாடாக வியட்நாம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக வியட்நாம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வியட்நாமை தொடர்ந்து, கொலம்பியா, இந்தோனேசியா, பணாமா, பிலிப்பைன்ஸ், இந்தியா, மெக்சிகோ, தாய்லாந்து, பிரேசில், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. முதல் 10 நாடுகளில் 6 நாடுகள் ஆசியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், முதல் 10 இடங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. குறிப்பாக, பிரேசில் 9ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. மேலும், கடந்த ஆண்டு 5ம் இடத்தில் இருந்த மலேசியா 11 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu