வியட்நாமில் பணமோசடி வழக்கில் மரண தண்டனை விதிப்பு

April 12, 2024

வியட்நாம் நீதிமன்றம் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பல பில்லியன் டாலர் பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவருக்கு வியட்நாம் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. வியட்னாமின் முன்னணி நிறுவனம் வான் தின் பாட். இதன் தலைவர் ட்ரோங் மி லான். இவர் 67 வயது பெண்மணி ஆவார். இவர் ஊழல், அபகரிப்பு மற்றும் வங்கி விதிமுறைகள் மீறல் போன்ற […]

வியட்நாம் நீதிமன்றம் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பல பில்லியன் டாலர் பண மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவருக்கு வியட்நாம் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. வியட்னாமின் முன்னணி நிறுவனம் வான் தின் பாட். இதன் தலைவர் ட்ரோங் மி லான். இவர் 67 வயது பெண்மணி ஆவார். இவர் ஊழல், அபகரிப்பு மற்றும் வங்கி விதிமுறைகள் மீறல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் நிரூபணம் ஆகி உள்ளது. இவருக்கு வியட்நாம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதனை எதிர்த்து அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தை அணுக 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் முக்கிய வணிக வங்கியான எஸ் சி பி வங்கியை 2012 முதல் 2022 வரை சட்டவிரோதமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் இந்த வங்கியின் மூலம் ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்களுக்கு கடன் அளித்ததாகவும் 86 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்துள்ள குற்றச்சாட்டும் உள்ளது.

வியட்நாமில் இந்த வழக்கு மிகப் பெரிய பண மோசடியாக பலராலும் பார்க்கப்படுகிறது. நாட்டின் நிகர வருவாயான ஜிடிபி-இன் மூன்று சதவீதத்துக்கு நிகரான ஊழல் இது என்று கூறப்படுகிறது. லான் உடன் சேர்ந்து 84 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு மூன்று ஆண்டு முதல் வாழ்நாள் சிறை தண்டனை வரை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவருடைய கணவரும் ஒரு முதலீட்டாளர் ஆவார். அவர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. அவர் போலியான நிறுவனங்களை அமைக்க உதவியுள்ளார். இது போன்ற பண மோசடி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவது மிகவும் அரிதானதாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu