வியட்நாம் அரசாங்கத்தின் தகவலின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை வியட்நாமில் விரிவுபடுத்த $15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முக்கிய முடிவு, ஐநா பொதுச் சபைக்காக அமெரிக்கா சென்றிருந்த வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் மூத்த துணைத் தலைவர் டிம் ஹியூஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்டது.
வியட்நாம் அரசாங்கம் தற்போது இந்த முதலீட்டு திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது. இதற்கு முன்னர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வியட்நாமில் செயற்கைக்கோள் சேவைகளை வழங்க திட்டமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, வியட்நாம் அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற தொழில்நுட்பத் துறைகளில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.