விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மகாராஷ்டிரா அரசு சுங்க கட்டணம் விடுப்பு அறிவித்துள்ளது.
விநாயகர் சதூர்த்தி முன்னிட்டு, மகாராஷ்டிரா அரசு கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணத்தை 5 முதல் 19 செப்டம்பர் வரை நீக்கியுள்ளது. மும்பை-பெங்களூரு மற்றும் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் சுங்க கட்டணம் மற்றும் சாலை வரியை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. சாலை வரி நீக்கத்திற்கு ஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையிடமிருந்து அனுமதி சீட்டை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.