விநாயகர் சிலை கரைப்பில் மோதல் காரணமாக வன்முறை ஏற்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை நீர்நிலைக்கு எடுத்துச் சென்றனர். அப்போது நாகமங்கலா பகுதியில், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மோதலின்போது கற்கள் வீசப்பட்டு, வன்முறை ஏற்பட்டது. இந்த விவகாரத்திற்கு பின்னர், பாதுகாப்புக்காக போலீசாரின் கட்டுப்பாட்டில் அப்பகுதியில் போலீசாரை குவிக்கப்பட்டனர். விநாயகர் சிலை கரைப்பின் போது ஏற்பட்ட இந்த வன்முறை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது