விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் முதல் விண்வெளி சுற்றுலா தொடக்கம்

August 11, 2023

விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தனது முதல் விண்வெளி சுற்றுலா பயணத்தை நேற்று தொடங்கியுள்ளது. மூன்று பயணிகள், முதல் முறையாக விண்வெளி சுற்றுலா பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜான் குட்வின், கீஷா ஷாஹாப் மற்றும் அவரது 15 வயது மகள் அனஸ்டாசியா மேயர்ஸ் ஆகியோர் விண்வெளி சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டனர். பூமியிலிருந்து விர்ஜின் விண்கலம் ஏவப்பட்ட பிறகு, சுமார் 45 நிமிடங்களுக்கு, அவர்கள் புவி ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் பயணித்துள்ளனர். நேரலையில் அவர்களது விண்வெளி சுற்றுலா ஒளிபரப்பப்பட்டது. அவர்கள் […]

விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தனது முதல் விண்வெளி சுற்றுலா பயணத்தை நேற்று தொடங்கியுள்ளது.

மூன்று பயணிகள், முதல் முறையாக விண்வெளி சுற்றுலா பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜான் குட்வின், கீஷா ஷாஹாப் மற்றும் அவரது 15 வயது மகள் அனஸ்டாசியா மேயர்ஸ் ஆகியோர் விண்வெளி சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டனர். பூமியிலிருந்து விர்ஜின் விண்கலம் ஏவப்பட்ட பிறகு, சுமார் 45 நிமிடங்களுக்கு, அவர்கள் புவி ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் பயணித்துள்ளனர். நேரலையில் அவர்களது விண்வெளி சுற்றுலா ஒளிபரப்பப்பட்டது. அவர்கள் ஆச்சரியத்துடன் பூமியை விண்வெளியில் இருந்து காண்பது அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தது. விண்வெளியில் சில நிமிடங்கள் பயணித்த பிறகு, நியூ மெக்சிகோவில் விண்கலம் புறப்பட்ட அதே ரன் வேயில் பாதுகாப்பாக தரையிறங்கினர். தங்கள் வாழ்நாளில் மிக முக்கியமான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இது அமைந்ததில் சந்தேகமே இல்லை என குட்வின் தெரிவித்துள்ளார். விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் முதல் விண்வெளி சுற்றுலா வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, மேலும் பல விண்வெளி சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu