ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பேராதரவு பெற்ற மிகைல் மிஷுஸ்டின், ரஷ்யாவின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் அடிப்படையில் இது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
கடந்த 4 வருடங்களாக ரஷ்யாவின் பிரதமராக மிகைல் மிஷுஸ்டின் பணியாற்றி வருகிறார். எனவே, அந்நாட்டின் சட்ட திட்டத்தின் படி, கடந்த செவ்வாய் கிழமை பதவி விலகினார். அதன் பிறகு, புதினின் 5வது ஆட்சிக் காலம் தொடங்கியது. அதன் பிறகு, புதினால், மிகைல் மிஷுஸ்டின் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷ்ய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பலர் மீண்டும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், பாதுகாப்புத்துறை அமைச்சர் சேர்கெய் மீண்டும் இணைக்கப்படுவாரா என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளது.