வோடபோன் ஐடியா பங்குகள் 15% வீழ்ச்சி

September 19, 2024

உச்ச நீதிமன்றம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஏஜிஆர் நிலுவைத் தொகையை மீண்டும் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் இன்று 15% சரிந்து ரூ.10.96 ஆக வர்த்தகமாகியது. கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி, வோடபோன் ஐடியா 2024-ம் நிதியாண்டின் இறுதியில் ரூ.70,320 கோடி ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், கணக்கீடுகளில் திருத்தம் செய்ய வேண்டும், 50% அபராதத்தை குறைக்க வேண்டும் மற்றும் குறைந்த […]

உச்ச நீதிமன்றம், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஏஜிஆர் நிலுவைத் தொகையை மீண்டும் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் இன்று 15% சரிந்து ரூ.10.96 ஆக வர்த்தகமாகியது.

கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி, வோடபோன் ஐடியா 2024-ம் நிதியாண்டின் இறுதியில் ரூ.70,320 கோடி ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், கணக்கீடுகளில் திருத்தம் செய்ய வேண்டும், 50% அபராதத்தை குறைக்க வேண்டும் மற்றும் குறைந்த வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும் என வோடபோன் ஐடியா கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்ததால், நிறுவனத்தின் நிதி நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது. உலகளாவிய தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளுக்கு ரூ.2.5 என்ற இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu