ஆக்கிரமிப்பு உக்ரைனில் செப்டம்பர் மாதம் தேர்தல் - ரஷ்யா அறிவிப்பு

June 16, 2023

வரும் செப்டம்பர் மாதத்தில், ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்துள்ள உக்ரைன் நாட்டு பகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தேர்தல் ஆணையம், நேற்று இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டோனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸ்போர்ஷியா, கெர்சான் ஆகிய 4 பிராந்தியங்களில், ஒரே நாளில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு, உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் கண்டனம் […]

வரும் செப்டம்பர் மாதத்தில், ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்துள்ள உக்ரைன் நாட்டு பகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தேர்தல் ஆணையம், நேற்று இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டோனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸ்போர்ஷியா, கெர்சான் ஆகிய 4 பிராந்தியங்களில், ஒரே நாளில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு, உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu